தேவனுடைய கற்பனை:-

 
  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!
இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, 
அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் 
சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் 
பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். (மத்தேயு 5:19)

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், 
உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், 
உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. 
(மாற்கு 12:30)

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: 
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; 
இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். (மாற்கு 12:31)

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 
(யோவான் 14:15)

நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே 
நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், 
என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். (யோவான் 15:10)

நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் 
அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. 
(யோவான் 15:12)

கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் 
நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 
(I தீமோத்தேயு 1:5)


நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், 
நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள். 
(I தீமோத்தேயு 6:13)

அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் 
கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 
(I யோவான் 2:4)

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் 
பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ 
அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். (I யோவான் 3:22)

நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் 
விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் 
அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. 
(I யோவான் 3:23)

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் 
அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம். 
(I யோவான் 4:21)

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் 
கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று 
அறிந்துகொள்ளுகிறோம். (I யோவான் 5:2)

நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் 
அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. 
(I யோவான் 5:3)

நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் 
கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே. (II யோவான் 1:6)

ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் 
நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் 
பாக்கியவான்கள். (வெளி 22:14)

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய 
இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். (யோவான் 17:3)

அவரை அறிவது எப்படி? அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்வதே, 
அவரை அறிந்ததிற்க்கு பொருள்.

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், 
அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். (I யோவான் 2:3)

நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள். 
(மத்தேயு 19:17)

Login

Donate NOW

Support the vision of CanaanStore.asia: To spread the gospel of Jesus Christ to more souls!
For more info, click here

Verse of the Day

“A person finds joy in giving an apt reply— and how good is a timely word!” — Proverbs 15:23 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook