எனக்காகவே – இறைவா Vol: 4

  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!

எனக்காகவே யாவையும் செய்து முடித்தார், அவரே என் இராஜாவே
குற்றம் குறையாவும் மன்னித்தென்னை வாழவைத்தார், அவரே என் இராஜாவே x 2

ஆராதனை என் இராஜாவுக்கே, மனதார செலுத்திடுவேன்
ஆராதனை என் இயேசுவுக்கே, நன்றியோடு செலுத்திடுவேன் x 2

மகிமையோடு வாழ்பவரே, மாறிடாத என் நேசரே
நித்தியரே நீரே சத்தியரே, இம்மட்டும் உதவின எபிநேசரே x 2
காண்கின்ற தெய்வம் நீரே, கடைசி வரை கறை சேர்த்திடுவீர் என்னை x 2

ஆராதனை என் இராஜாவுக்கே, மனதார செலுத்திடுவேன்
ஆராதனை என் இயேசுவுக்கே, நன்றியோடு செலுத்திடுவேன் x 2

வல்லமை நிறைந்த இயேசு நாதா, வாழ்த்தி வணங்குவேன் உம் நாமத்தை
வேறொரு நாமம் இல்லை பணிந்திடவே, விண்ணகம் போற்றும் தேவன் நீரே  x 2
வல்லவர் நீர்தானையா, வாழும் வரை உம்மை தொழுதிடுவேன் x 2

ஆராதனை என் இராஜாவுக்கே, மனதார செலுத்திடுவேன்
ஆராதனை என் இயேசுவுக்கே, நன்றியோடு செலுத்திடுவேன் x 2

உலகில் வாழும் நாட்களெல்லாம், உன்னோடு இருப்பேன் என்றவரே
உயர்ந்த அடைக்கலமானவரே, உன்னதரே என்றும் உயர்ந்தவரே x 2
கிருபை நிறைந்தவரே, கிறிஸ்து இயேசுவே என் தஞ்சமே x 2

ஆராதனை என் இராஜாவுக்கே, மனதார செலுத்திடுவேன்
ஆராதனை என் இயேசுவுக்கே, நன்றியோடு செலுத்திடுவேன் x 2

Login

Donate NOW

Support the vision of CanaanStore.asia: To spread the gospel of Jesus Christ to more souls!
For more info, click here

Verse of the Day

“The fear of the LORD is the beginning of wisdom, and knowledge of the Holy One is understanding.” — Proverbs 9:10 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook